போர்வை வேய்ந்த
என் உடல் புழுக்கத்தின்
வெப்பத்தினை
மின்விசிறியின் துணைகொண்டு
வெளியேற்றுவேன்
மழைக்கிட்டாத ஏமாற்றங்களோடு
இளவேனிர்காலத்து வெயிலிடம்
இல்லை
எனக்கு எந்த குற்றசாட்டுகளும்
புழுங்கி வழியும்
வேர்வையின் பிசுபிசுப்பில்
காலநிலையின் பிரதிபளிப்பு
நீ இல்லாத
இவ்வேளைதனில்
உள்ளே புழுங்கிடும்
மனப்புழுக்கத்தை
யாரிடம் சொல்வேன் நான்
எனது பருவத்தின் மீது
திரண்டு பெருகும்
வெயில்
நினைவுக்குள் நுழைந்துகொள்கிறது
நீயாக
வெகு அமர்த்தலாக
காயும் இந்த சூரியனிடம்
கிழிபடும்
என் மழைக்கால பக்கங்கள்
இந்த அசௌகரியங்களுக்கு
பழகிவிட்டேன் நான்
பின்னிரவின் மூடுபனி
ஏற்படுத்திய
உதட்டு வெடிப்புகளில்
பகலின் புழுக்கத்தை பூசிவைத்து
காத்திருக்கிறேன் உனக்காக
நீ வராமல்
போனதில்
எனக்கேற்பட்ட
சங்கடங்களினால்
நான் வெயில் போல
காய்ந்து விடுவிப்பேன்
அனல் மூச்சினை
அதில் கருகி முடியும்
காலம்
என்றாலும்
புழுக்கங்களை தவிர
என்னிடம் இல்லை
யாரிடமும் சொல்ல
ஒரு செய்தியும்
No comments:
Post a Comment