உன் சிரிப்பொன்றை
என் ஞாபக அடுக்குகளில்
பொத்திவைத்திருக்கிறேன்
என்னை
பற்றிப்படரும் வேதனையாக
இம்மாலையில்
நசிந்து
கிடக்கும் ஒளியில்
பெருகுகிறது
துன்பம்
ஏதொன்றையும்
நினைவில்
கொள்வதில்லை
என்ற
என் தீர்மானங்கள்
அர்த்தமிழந்து
போகின்றன
யாருமற்ற
என் தனிமை மாலையில்
வலிந்து
வீசும் காற்றோ
மென்மையாய்
தொடும் தென்றலோ
யாதொன்றும்
மாற்றப்போவதில்லை
உன் மீதான என் அபிப்ராயங்களை
அவை கெட்டித்து உறைந்து கிடக்கின்றன
குளத்தடியில்
கல் போல
சொல்
உன் மந்தகாசங்களை
நான் என்ன செய்வது
நான் துன்பம் கொள்ளும்படியாய்
எனை தீயாய் சூழும்
உன் மந்தகாசங்களை
என்ன தான் செய்வது
No comments:
Post a Comment