நான் இங்கிருந்து
வெளியேறிவிட வேண்டுமென்று
துடிக்கிறாய்
நான்
உன் அதிகாரத்திற்கு பயந்து
குளிர்கால பறவைபோல
குறுகி அமர்ந்திருக்கிறேன்
என் இந்த நிலையை
நீ தேநீர் ருசித்தபடி
விரும்பி ரசிக்கிறாய்
என் வாழ்வின் மீது
குறுக்கீடொன்றை செலுத்துகிறாய்
அதிக ஆவலோடு
என் மரணத்தை விரும்புகிறாய்
யாரும் விரும்பிடாத
என் முகத்தை
யாரும் நேசித்திடாத
என் குரலை
யாரும் புணர்ந்திடாத
என் உடலை
ஆழக் குழிதோண்டி
புதைக்க வேண்டுமென
கால்கள் தரையினில் பாவாமல்
குதிக்கிறாய்
உன் ஆரவாரங்களுக்கு நடுவே
நானோ புழுவினை போல
சுருண்டு படுத்திருக்கிறேன்
நசுக்க நீள்கின்றன
உன் கால்கள்
என் இருத்தலை
வெறுக்கிறாய் நீ
என் முகம்
மிக அறுவருப்பானதென
உன் சுவரெங்கும் கிறுக்கி வைக்கிறாய்
புடைத்த என் வயிறு
அவலட்சணம் என்று உரக்க சிரிக்கிறாய்
என் குறியின் அளவு பற்றி
அதிகம் ஏளனம் கொள்கிறாய்
உனக்கு கடைசி வரை
புரியவேயில்லை
உள்ளே எனக்கும்
ஒரு சதைப் பிண்டம் உண்டென்று
கைநழுவி தரையினில்
வீழும்
தண்ணீரைப் போல
காலத்தை
நீ நினைத்துக்கொள்கிறாய்
உன் உயரம் மிகப்பெரியதென்றும்
அளவிடமுடியாதது உன் அதிகாரமென்றும்
உன் செங்கோலுக்கு கட்டுப்பட்டவைகள்
காற்றும் திசைகளும்
என்றும்
நீ வீணே இருமாந்திருக்கிறாய்
காற்றின் பலத்தை
நீ அறிந்ததில்லை
திசைகளின் அடர்த்தியை
நீ தெரிந்ததில்லை
தீயின் கால்கள் எப்படி பிடித்தாலும்
சுடர்ந்தெரியும்
எனதிருப்பை மறுக்க
நீ யார்
என் வாழ்வின் மீது
குறுக்கீடு செலுத்த
உன் வாள் முனைகளுக்கு
அனுமதி எங்கே
என் மீது குறுக்கிடும்
உன் அதிகாரத்தின்
அளவுகோள்களை
நான் உருவி எரிகிறேன்
உடைந்து சிதறும்
உச்சத்தில் உன் மௌலி
வெளியேறிவிட வேண்டுமென்று
துடிக்கிறாய்
நான்
உன் அதிகாரத்திற்கு பயந்து
குளிர்கால பறவைபோல
குறுகி அமர்ந்திருக்கிறேன்
என் இந்த நிலையை
நீ தேநீர் ருசித்தபடி
விரும்பி ரசிக்கிறாய்
என் வாழ்வின் மீது
குறுக்கீடொன்றை செலுத்துகிறாய்
அதிக ஆவலோடு
என் மரணத்தை விரும்புகிறாய்
யாரும் விரும்பிடாத
என் முகத்தை
யாரும் நேசித்திடாத
என் குரலை
யாரும் புணர்ந்திடாத
என் உடலை
ஆழக் குழிதோண்டி
புதைக்க வேண்டுமென
கால்கள் தரையினில் பாவாமல்
குதிக்கிறாய்
உன் ஆரவாரங்களுக்கு நடுவே
நானோ புழுவினை போல
சுருண்டு படுத்திருக்கிறேன்
நசுக்க நீள்கின்றன
உன் கால்கள்
என் இருத்தலை
வெறுக்கிறாய் நீ
என் முகம்
மிக அறுவருப்பானதென
உன் சுவரெங்கும் கிறுக்கி வைக்கிறாய்
புடைத்த என் வயிறு
அவலட்சணம் என்று உரக்க சிரிக்கிறாய்
என் குறியின் அளவு பற்றி
அதிகம் ஏளனம் கொள்கிறாய்
உனக்கு கடைசி வரை
புரியவேயில்லை
உள்ளே எனக்கும்
ஒரு சதைப் பிண்டம் உண்டென்று
கைநழுவி தரையினில்
வீழும்
தண்ணீரைப் போல
காலத்தை
நீ நினைத்துக்கொள்கிறாய்
உன் உயரம் மிகப்பெரியதென்றும்
அளவிடமுடியாதது உன் அதிகாரமென்றும்
உன் செங்கோலுக்கு கட்டுப்பட்டவைகள்
காற்றும் திசைகளும்
என்றும்
நீ வீணே இருமாந்திருக்கிறாய்
காற்றின் பலத்தை
நீ அறிந்ததில்லை
திசைகளின் அடர்த்தியை
நீ தெரிந்ததில்லை
தீயின் கால்கள் எப்படி பிடித்தாலும்
சுடர்ந்தெரியும்
எனதிருப்பை மறுக்க
நீ யார்
என் வாழ்வின் மீது
குறுக்கீடு செலுத்த
உன் வாள் முனைகளுக்கு
அனுமதி எங்கே
என் மீது குறுக்கிடும்
உன் அதிகாரத்தின்
அளவுகோள்களை
நான் உருவி எரிகிறேன்
உடைந்து சிதறும்
உச்சத்தில் உன் மௌலி
No comments:
Post a Comment