பகலெல்லாம்
பறந்து திரிந்த
பறவைக்கூட்டம்
கூடு திரும்பும் நேரம்
ஜன்னலின்
திரைசீலை விளக்கி
சொற்பமான
வெளிச்சத்தை
அறையுனுள்
அனுமதிக்கிறேன்
தனித்திருக்கும்
என்னோடு
யாருமே
இல்லை
நான் அனுமதித்த
வெளிச்சத்தை
தவிர
வரையரைகலற்று
நான்
பேசித்தீர்க்க
யாரேனும்
வருவார்கள்
என்ற நம்பிக்கை இழந்துவிட்டேன்
எனை விழுங்கிடும் தீராப்பசிகொண்ட
மிருகம்
போல காட்சித் தரும்
இத்தனிமை
வீடு
எனக்கு
அச்சம் தந்தாலும்
நான் சகித்துக் கொள்ளத்தான்
வேண்டிஇருக்கிறது
இந்த வீட்டையும்
தனிமையும்
மற்றும்
எதிர்வரும்
இரவையும்
அதில்
காயும் அந்த நிலவையும்
No comments:
Post a Comment