Thursday, 1 October 2015

..........................................

பனிக்காலத்தில்
பாடல் பாடிக்கொண்டிருந்தேன்
அது துயர்மிகுந்தது
இருந்ததாலும் என்னுடையது


நீ வருவதாக சொன்ன
வாசலை
பார்த்தபடி
தேநீர் போட்டுக்கொண்டிருந்தேன்
எப்போதுமே
நீ வார்த்தைகளை காப்பாற்றியதில்லை

நீ உடைக்க தோதான
கோப்பை நான்

எந்நேரத்திலும்
உடையும்படியாய்
தளும்பி நின்றேன்
எனவேதான்
நீ போட்டுடைத்தாய்
இறக்கங்களின்றி

நீ வராதது பற்றி
எனக்கு வருத்தங்கள் இருந்தும்
தண்டனைகள்
உனக்கல்லவா அளிக்கப்பட்டிருக்கவேண்டும்
மாறாக
என் கைகளில்
ஆணிகள் அறையப்பட்டதும்
இந்தக் கொலையில் என் பங்கில்லை
என நீ கைகழுவிக் கொண்டதும்
எவ்விதத்தில் ஞாயம்

No comments:

Post a Comment