Wednesday 7 October 2015

உனது நினைவில் நானுண்டா



வெளியே
மழையோய்ந்து விட்டது
இலைகளும் தளிர்களும்
புத்தம் புதிதாய்
காற்றில் ஆடுகின்றன
மயக்கும் இந்த
சீதோஷணத்தில்
உன்னை நினையாமல்
இருக்கமுடிவதில்லை

 
எங்கிருந்தாலும்
எனக்குள்
எட்டிப் பார்க்கிறாய்  நீ
உன்னை புறந்தள்ளவோ
உன்னை மறந்து
மறுதலிக்கவோ
நொடிப்பொழுதும் நினைப்பதில்லை

 
இந்த  நீர்ப்பறவைகளை பார் 
மழையில் நனைந்து
எவ்வளவு  குதூகளுத்துடன்
வாழ்வை வாழ்கின்றன
நம்மால்
அது  ஏன்  முடியாமல்  போனது

 
என்  காலத்தின் சுவரில்
சொட்டும்
ஒவ்வொரு மணித்துளியிலும்
உன்  முகத்தையே
நான்  பார்க்கிறேன்
என்றேனும் ஒருநாள்
நீ  வந்து நிற்பாய்  என
நான் 
கதவுகளை அடைத்துச்சாத்துவதே  இல்லை
 

உன்  நினைவென்னும் வீணையில்
ராகமிசைக்கும்
நான் 
பைத்தியக்காரனோ
மனம்  பிரழ்ந்தவனோ
அல்ல 
இப்பொழுதும்
உன்னை தூக்கிச்  சுமக்கும்
உள்ளம் என்னிடம்  உண்டு
 

மெலிதாய்
நான்  சிரிக்கும்
புன்முறுவல் உனக்கு  பிடிக்கும் என்பாயே
இப்போதெல்லாம்
நான்  சிரிப்பதேயில்லை
தெரியுமா 


கண்ணாமூச்சி ஆடும் இந்த
வாழ்விடம்
நான் தோற்றுக்கொண்டே இருப்பதும்
நீ காணமல் போவதும்
இன்னும் எத்தனை நாளைக்குத்தான்

காற்றிலாடும் அரளியென
நான்  கண்டுகொள்ளப்படுவதேயில்லை
என்பதை அறிந்திருக்கிறேன்
இருந்தும்
நீ  வந்து சூடிக்  கொள்வாய்
என்ற  நினைப்பில்லாமலில்லை

 
நீ  சொல்
உன்  நினைவின்
ஆழத்தில் 
நான்  இருக்கிறேனா ?

No comments:

Post a Comment