தனிமையின்
தடயங்கலேயின்றி
கனத்த
என் வீட்டின் மௌனத்தில்
உன் மோசமான பிம்பம்
விழுகிறது
நான் அதை அனுமதிக்க கூடாது
சத்ருக்களின்
அபிலாஷைகளை
நான் பொருட்படுத்துவதில்லை
எனினும்
அவ்வப்பொழுது
முகிழ்க்கிறாய்
நீ
என் உயிரென்னும் ஜீவ நதியில்
உன் நினைவுகளால்
அவதியுற்ற
என் மனம்
வேறதையும்
விட
கிழித்துப்போட
நினைப்பது
உன்னைப்பற்றிய
கடந்த
கால பக்கங்களை
நான் உன்னை
எவ்வளவு
நேசித்தேன்
என்ற பட்டியல் இடும்
அவகாசம்
எனக்கில்லை
அதை செவியுறும்
பொறுமையும்
உனக்கில்லை
கடைசி
வரையிலும்
உன் காதில்
விழாமலே
போனது
என் கேவல்
இது என் சமயம்
காரியங்களுக்கு
பதில் செய்யவேண்டும்
வெறும்
குரல்களுக்கு பதில் மொழிந்தது போதும்
இனி செயல்களுக்கு
எனை இம்சித்த
எனை கொல்லாமல் கொன்று சிரித்த
உன் வன்மத்தை
பழிதீர்க்கவென
உன் கழுத்தில் கால் வைத்து
ஏறி நிர்ப்பேன்
கண்ணில்
சுடு நீர் வழிய
No comments:
Post a Comment