என்னை
என்ன
தீர்மானிக்கசொல்கிறீர்கள்
சுதந்திரங்கலற்றவனின்
அபிமானத்திற்கு
இங்கென்ன
மதிப்பிருந்துவிடப்
போகிறது
என்னை
எதை நோக்கி
நகரச்சொல்கிறீர்கள்
முடவன்
நான்
என்னைவிடவும்
காலம்
அதிவேகம்
பூணுகிறது
காற்று
வலுவாக வீசுகிறது
என்னை
தக்கவைத்துக் கொள்ளல்
சாத்தியமற்றது
என்றுணர்ந்து
தான்
கரையத்தொடங்கி
இருக்கிறேன்
எவ்வித
வருத்தங்களுமின்றி
காற்றென்னை
குடிக்கும்
முழுமையாக
நான் ராஜபோதை
என்பது
நீங்கள்
அறியாதது
No comments:
Post a Comment