Thursday 1 October 2015

துயரம்

யாருமில்லாத மாலைகள்
வலிக்கிறது

நான் இந்த இளமையில்
எதை நினைத்துக் கொள்வது
வாழ்வையா
மரணத்தையா

பாதி எழுதி முடித்த
கவிதை
அறை சுவரில் உடைந்து தொங்கும்
ரசம் போன பாதி கண்ணாடி
அறையெங்கும்
இறைந்து கிடக்கும் துணிகள்


பயமுறுத்துகிறது
உடன் பயணிக்கும் தனிமை
இத்தனிமையின் பாடல்கள்
நினைவூட்டுவது
பிரிந்துபோனவர்களை
இறந்துபோனவர்களை
மற்றும்
இருந்தும் இல்லாமல் இருப்பவர்களை

காயங்களை ஏற்படுத்தும்
மனிதர்களால்
திடுக்கிட்டுகிடக்கிறது
என் வயது
நான் யாரிடம் புகார் சொல்ல

நான் வாழவே விரும்புகிறேன்
துரத்துகிறது மரணம்
நான் சாக விரும்புகிறேன்
விரட்டுகிறது வாழ்வு

இளமை
அப்படி ஒன்றும் இனிக்கவில்லை

No comments:

Post a Comment