எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்
கையசைத்து
இதழ் விரித்து
பல்காட்டி
வழியனுப்பிவைக்கும்
வழமையில்
எனக்கு உடன்பாடில்லை
குறைந்தபட்சம்
ஆழ்மனதைத்தொடும்
ஒரு முத்தமிடவேண்டும்
உள்ளங்கை பற்றி
ஒவ்வொரு ரேகையாய்
தடவிக்கொடுக்க வேண்டும்
பிசகற்ற அன்போடு
தோள்சேர்த்து
ஸ்பரிசிக்கவேண்டும்
பொய்மையற்ற
புன்னகையொன்றை
வழிச்செலவுக்குப் பகிர வேண்டும்
மிச்சமிருக்கும்
சொற்களனைத்தையும்
பேச்சுத்துணைக்கு
ஒரு கைப்பையில் நிரப்பி
ரயிலேற்ற வேண்டும்
திடுமென
வெறுமை படர்ந்த
ரயில் கிளம்பிய
நடைமேடையில்
வேர்பிடிக்க அமர்ந்தபடி
சொட்டுச் சொட்டாய்
புன்கணீர் உகுக்கவேண்டும்
.
.
.
உங்களைப் போல்
எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்
~~க.உதயகுமார்
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5358

ஒவ்வொரு வரியும் நிஜமாய் மனதில் புகுந்தது......
ReplyDeleteஉங்க தளத்துல கமன்ட் போட கஷ்டமா இருக்கு
settings -> posts and comments -> Show word verification -> no குடுங்க
காயத்ரி ...நீங்கள் சொன்ன மாற்றத்தை செய்திருக்கிறேன் ...நான் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது ..இங்கு நிறைய settings விஷயங்கள் எனக்கு புரியவில்லை .
Deleteபின்னூட்டத்திற்கு நன்றி காயத்ரி !!!