Friday 10 January 2014

தன்னியல்பு

சடசடவென பொழிகிறது
மழை

ஆங்கோர் மரத்தில் கூடிகட்டி வாழும்
ஊர்க்குருவியைப் பற்றி
மழைக்கு எந்த லட்சியமும் இல்லை

அடித்து வீசுகிறது
காற்று

மெல்லிய மல்லிக்கொடி
ஒடிந்துவீழ்வது பற்றி
காற்றுக்கென்ன விசனமிருக்கப்போகிறது..?

எது ஒன்றும்
அதன் அதன்
தன்னியல்பிலேயே இருக்கிறது

யாரை குறை சொல்ல முடியும்?
வேண்டாம்
யாரையும் குறை சொல்ல வேண்டாம்

இதோ என் கூட்டின்
மரக்கதவுகளை
கூர் மூக்கால்
சுரண்டிக்கொண்டிருக்கும்
அந்தப் பறவைக்கு
யாரேனும் சொல்லுங்களேன்
கதவை மூடிக்கொண்டு
அழுவது என்னியல்பென

3 comments:

  1. கவிதை அருமை நண்பரே....

    ReplyDelete
  2. இருந்தாலும் சுரண்டிக் கொண்டுதான் இருக்கும் இந்தக் குருவி.

    ReplyDelete