வாதையை விடவும் அனத்துகிறது
நின் பிரிவின் சூடு
புறக்கணிப்பின் சிலுவையில்
ரத்தம் சொட்ட சொட்ட
என்னை ஏன் கைவிட்டாய்
நீ அலட்சியப்படுத்தும் என்னை
சுமப்பது
எனக்கு வலிக்கிறது
உதிர்காலத்தின் இலையென
நெஞ்சம் கனத்து விழுகிறேன்
நீயற்ற முகட்டிலிருந்து
வழிதவறிய எறும்பென
பரிதவித்து
உன்சாயலொத்த அன்பை
தேடித் தேடி களைத்துப் போகிறேன்
உன் நேசத்தின் மழையைத் தவிர
வேறெதிலும் நனைய விருப்பமில்லை
ஊடலின் மேகம் உடைந்து
நீ பொழிந்தென்னை சிநேகிக்கும் நாள் என்னாளோ
~~க.உதயகுமார்
No comments:
Post a Comment