முடிவுறா காத்திருப்புகளின்
வெம்மையில்
அவனின்
மனச்சுவரின் பூச்சுகள்
உதிரத்தொடங்கிவிட்டன
தன் உதிரத்தின்
புளித்த சுவை
அவனுக்கு
இப்போது பிடிக்கவே இல்லை
முகத்தில் துப்பிச்சென்ற
உண்மைகள் அனைத்தையும்
நக்கி முடித்தாகிவிட்டது
மிடறு மிடறாய்
குடிக்க
வலியெதுவும் புதிதாய் இல்லை
வாழ்தளற்ற வாழ்தலில்
நடுங்கி நடுங்கி
நீளம் கடக்க
இதோ நுழைகிறான்
நிச்சயமற்ற இரவிற்குள்
--க.உதயகுமார்
No comments:
Post a Comment