வெறித்தபடி நீளும்
இந்தப்பகலுக்கு
சொல்லவென
ஆறுதல் ஒன்று
ஊர்க்குருவியிடம் இருக்கிறது
வெயிலில் நீந்திப்பறக்கும்
ஊர்குருவியிடம்
பகிரவென
இளைப்பாறுதலின் குறிப்பொன்று
நொச்சி மரக்கிளையில் பூத்துக்கிடக்கிறது
நிழலைப் பொழியும்
நொச்சி மரக்கிளை அடியில்
சாவகாசமாய் அசை போடும்
பசுவின் மடி நுனியில்
தன் முலை முட்டும் குட்டிக்கென
சொட்டு சொட்டாய்
கசிகிறது மாகாதல்
இளங்கன்றின் நாநுனியில்
ஒரு யுகத்துக்குமான
பேரன்பின் ஈரம்
--க.உதயகுமார்
No comments:
Post a Comment