இறந்தவர்கள்
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் புகைப்படங்களில்
உதிர்ந்த இறகின் மயிர்முகங்களில்
பறவையை தேடிக்கொண்டிருக்கிறேன்
இருப்பை மறுத்து
தூக்கிட்டு மரித்தவர்
புகைப்பட விழிகளில்
அன்பு கசிந்து உறைகிறது
நிலம்தொட்ட இலையின்
புடைத்த நரம்புகளில்
வேர்களின் சாயலை கண்டுணர்கிறேன்
நதி புதைக்கப்பட்ட மணற்குழிகளைப்போல
இறந்தவர்களின் கைபேசி எண்களும் , முகநூல்பக்கங்களும்
நிலையாமையை நினைவூட்டியபடி இருக்கிறது
கடற்கரையில் காலுக்கு கீழே
கரையும் மணலில்
வாழ்க்கை தீர்ந்துகொண்டிருப்பதை
சலனமற்று படித்துக் கொண்டிருக்கிறேன்
--க.உதயகுமார்
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...